நாயுஞ் செயாத நடையுடை யேனுக்கு நாணமும்உள் நோயுஞ் செயாநின்ற வன்மிடி நீக்கிநன் நோன்பளித்தாய் பேயுஞ் செயாத கொடுந்தவத் தால்பெற்ற பிள்ளைக்குநல் தாயும் செயாள்இந்த நன்றிகண் டாய்செஞ் சடையவனே