நாய்க்குங் கடையேன் பிழைஅனைத்தும் நாடில் தவத்தால் நல்கியநல் தாய்க்கும் கோபம் உறும்என்னில் யாரே யென்பால் சலியாதார் வாய்க்கும் கருணைக் கடல்உடையாய் உன்பால் அடுத்தேன் வலிந்தெளிய பேய்க்கும் தயவு புரிகின்றோய் ஆள வேண்டும் பேதையையே