நாரா யணன்திசை நான்முகன் ஆதியர் நண்ணிநின்று பாரா யணஞ்செயப் பட்டநின் சேவடிப் பங்கயமேல் சீரா யணம்பெறப் பாடுந் திறம்ஓர் சிறிதும்இலேன் ஆரா யணங்குற நின்றேன்பொன் மன்றத் தமர்ந்தவனே
நாரா யணனு நான்முகனு நயந்து வியக்க நிற்கின்றேன் ஏரார் உலகில் இனிஅடியேன் செய்யும் பணியை இயம்புகவே
நாரா யணனொடு நான்முக னாதியர் பாரா யணம்செயும் பதும பதத்திற்கே அபயம்