நால்வருணம் ஆசிரமம் ஆசாரம் முதலா நவின்றகலைச் சரிதம்எலாம் பிள்ளைவிளை யாட்டே மேல்வருணம் தோல்வருணம் கண்டறிவார் இலைநீ விழித்திதுபார் என்றெனக்கு விளம்பியசற் குருவே கால்வருணங் கலையாதே வீணில்அலை யாதே காண்பனஎல் லாம்எனக்குக் காட்டியமெய்ப் பொருளே மால்வருணங் கடந்தவரை மேல்வருணத் தேற்ற வயங்குநடத் தரசேஎன் மாலைஅணிந் தருளே