நாளாகு முன்எனது நன்நெஞ்சே ஒற்றியப்பன் தாளாகும் தாமரைப்பொன் தண்மலர்க்கே - ஆளாகும் தீர்த்தர் தமக்கடிமை செய்தவர்தம் சீர்ச்சமுகம் பார்த்துமகிழ் வாய்அதுவே பாங்கு