நாளை ஏகியே வணங்குதும் எனத்தினம் நாளையே கழிக்கின்றோம் ஊளை நெஞ்சமே என்னையோ என்னையோ உயர்திருத் தணிகேசன் தாளை உன்னியே வாழ்ந்திலம் உயிர்உடல் தணந்திடல் தனைஇந்த வேளை என்றறி வுற்றிலம் என்செய்வோம் விளம்பரும் விடையோமே
நாளை வருவ தறியேன்நான் தஞ்சம் அனைய நங்கையர்தம் ஆளை அழுத்தும் நீர்க்குழியில் அழுந்தி அழுந்தி எழுந்தலைந்தேன் கோளை அகற்றி நின்அடிக்கே கூடும் வண்ணம் குறிப்பாயோ வேளை எரித்த மெய்ஞ்ஞான விளக்கே முத்தி வித்தகமே