நிதிதரு நிறைவே போற்றிஎன் உயிர்க்கோர் நெறிதரு நிமலமே போற்றி மதிமுடிக் கனியே போற்றிஎன் தன்னை வாழ்வித்த வள்ளலே போற்றி விதிமுதற் கிறையே போற்றிமெய்ஞ் ஞான வியன்நெறி விளக்கமே போற்றி பதிபசு பதியே போற்றி நின்பாதம் பாடஎற் கருளுக போற்றி