நிதியே என்னுள்ள நிறைவே பொதுவில் நிறைந்தசிவ பதியே அருட்பெருஞ் சோதிய னேஅம் பலம்விளங்கும் கதியே என்கண்ணும் கருத்தும் களிக்கக் கலந்துகொண்ட மதியே அமுத மழையேநின் பேரருள் வாழியவே