நிதியேநின் பொன்னடி ஏத்தாது நெஞ்சம் நிறைமயலாம் சதியே புரிகின்ற தென்னைசெய் கேன்உனைத் தாழலர்தம் விதியே எனக்கும் விதித்ததன் றோஅவ் விதியும்இள மதியேர் சடைஅண்ண லேஒற்றி யூர்ஒளி மாணிக்கமே