நிந்தையிலார் நெஞ்சகத்தே நிறைந்தபெருந் தகையை நிலையனைத்தும் காட்டியருள் நிலைஅளித்த குருவை எந்தையைஎன் தனித்தாயை என்னிருகண் மணியை என்உயிரை என்உணர்வை என்அறிவுள் அறிவை சிந்தையிலே தனித்தினிக்கும் தெள்ளமுதை அனைத்தும் செய்யவல்ல தனித்தலைமைச் சிவபதியை உலகீர் முந்தைமல இருட்டொழிய முன்னுமினோ கரண முடுக்கொழித்துக் கடைமரண நடுக்கொழித்து முயன்றே