நினைத்தபோ தெல்லாம் நின்னையே நினைத்தேன் நினைப்பற நின்றபோ தெல்லாம் எனைத்தனி ஆக்கி நின்கணே நின்றேன் என்செயல் என்னஓர் செயலும் தினைத்தனை எனினும் புரிந்திலேன் எல்லாம் சிவன்செய லாம்எனப் புரிந்தேன் அனைத்தும்என் அரசே நீஅறிந் ததுவே அடிக்கடி உரைப்பதென் நினக்கே