நின்நிலை அறியா வஞ்சகர் இடத்தில் நின்றுநின் றலைதரும் எளியேன் தன்நிலை அறிந்தும் ஐயகோ இன்னும் தயைஇலா திருந்தனை என்னே பொன்நிலைப் பொதுவில் நடஞ்செயும் பவளப் பொருப்பினுள் மலர்ந்திடும் பூவே கொல்நிலை வேங்கைக் கொளும்திருத் தணிகைக் குன்றமர்ந் திடுகுணக் குன்றே