நின்ன டிக்கண்ஓர் கணப்பொழு தேனும் நிற்ப தின்றியே நீசமங் கையர்தம் கன்ன வில்தனம் விழைந்தது மனம்காண் கடைய னேன்செயக் கடவதொன் றறியேன் அன்ன ஊர்தியும் மாலும்நின் றலற அடியர் தங்களுள் அமர்ந்தருள் அமுதே தென்இ சைப்பொழில் ஒற்றிஎம் வாழ்வே செல்வ மேபர சிவபரம் பொருளே