நின்னன்பர் தம்பால் நிறுத்துதியோ அன்றிஎனைப் பொன்னன்பர் தம்பால் புணர்த்துதியோ - பொன்னன்பர் வைவமே என்னும் வறியேன் அறியேனென் தெய்வமே நின்றன் செயல்