நின்னிருநாள் துணைபிடித்தே வாழ்கின் றேன்நான் நின்னைஅலால் பின்னைஒரு நேயம் காணேன் என்னைஇனித் திருவுளத்தில் நினைதி யோநான் ஏழையினும் ஏழைகண்டாய் எந்தாய் எந்தாய் பொன்னைஅன்றி விரும்பாத புல்லர் தம்மால் போகல்ஒழிந் துன்பதமே போற்றும் வண்ணம் சின்னம்அளித் தருட்குருவாய் என்னை முன்னே சிறுகாலை ஆட்கொண்ட தேவ தேவ