நின்புகழ்நன் கறியாதே நின்னருளோ டூடி நெறியலவே புகன்றேன்நன் னிலைவிரும்பி நில்லேன் புன்புலையேன் புகன்றபிழை பொறுத்தருளல் வேண்டும் பூரணசிற் சிவனேமெய்ப் பொருள்அருளும் புனிதா என்புடைஅந் நாளிரவில் எழுந்தருளி அளித்த என்குருவே என்னிருகண் இலங்கியநன் மணியே அன்புடையார் இன்படையும் அழகியஅம் பலத்தே ஆத்தாளும் அப்பனுமாய்க் கூத்தாடும் பதியே