நின்போன்ற தெய்வம்ஒன் றின்றென வேதம் நிகழ்த்தவும்நின் பொன்போன்ற ஞானப் புதுமலர்த் தாள்துணைப் போற்றுகிலேன் என்போன்ற ஏழையர் யாண்டுளர் அம்பலத் தேநடஞ்செய் மின்போன்ற வேணிய னேஒற்றி மேவிய வேதியனே