நின்மயமாய் என்மயமாய் ஒன்றுங் காட்டா நிராமயமாய் நிருவிகற்ப நிலையாய் மேலாம் தன்மயமாய்த் தற்பரமாய் விமல மாகித் தடத்தமாய்ச் சொரூபமாய்ச் சகச மாகிச் சின்மயமாய்ச் சிற்பரமாய் அசல மாகிச் சிற்சொலித மாய்அகண்ட சிவமாய் எங்கும் மன்மயமாய் வாசகா தீத மாகி மனாதீத மாய்அமர்ந்த மவுனத் தேவே