நிருத்தம் பயின்றார் நித்தியனார் நேச மனத்தர் நீலகண்டர் ஒருத்தர் திருவாழ் ஒற்றியினார் உம்பர் அறியா என்கணவர் பொருத்தம் அறிந்தே புணர்வாரோ பொருத்தம் பாரா தணைவாரோ வருத்தந் தவிரக் குறப்பாவாய் மகிழ்ந்தோர் குறிதான் வழுத்துவையே