நிறைஅணிந்த சிவகாமி நேயநிறை ஒளியே நித்தபரி பூரணமாம் சுத்தசிவ வெளியே கறைஅணிந்த களத்தரசே கண்ணுடைய கரும்பே கற்கண்டே கனியேஎன் கண்ணேகண் மணியே பிறைஅணிந்த முடிமலையே பெருங்கருணைக் கடலே பெரியவரெல் லாம்வணங்கும் பெரியபரம் பொருளே குறைஅணிந்து திரிகின்றேன் குறைகளெலாந் தவிர்த்தே குற்றமெலாங் குணமாகக் கொள்வதுநின் குணமே