நிறைமதி யாளர் புகழ்வோய் சடையுடை நீண்முடிமேல் குறைமதி தானொன்று கொண்டனை யேஅக் குறிப்பெனவே பொறைமதி யேன்றன் குறைமதி தன்னையும் பொன்னடிக்கீழ் உறைமதி யாக்கொண் டருள்வாய் உலகம் உவப்புறவே