நிறைவளர் முறையே முறைவளர் நிறையே நிறைமுறை வளர்பெரு நெறியே பொறைவளர் புவியே புவிவளர் பொறையே புவிபொறை வளர்தரு புனலே துறைவளர் கடலே கடல்வளர் துறையே துறைகடல் வளர்தரு சுதையே மறைவளர் பொருளே பொருள்வளர் மறையே மறைபொருள்வளர்சிவபதியே