பாடல் எண் :583
நிலத்தே சிறுவர்செய் குற்றங்கள் யாவும் நினைத்தறவோர்
சலத்தே உளத்தை விடார்என்பர் ஆதலின் தாதையென்றே
குலத்தேவர் போற்றும் குணக்குன்றே மேஎங் குலதெய்வமே
புலத்தே இழிதகை யேன்பிழை யாவும் பொறுத்தருளே
பாடல் எண் :4692
நிலத்தே புழுத்த புழுவும் அலேன்புன் நிலத்திழிந்த
மலத்தே புழுத்த புழுஅனை யேனைஅவ் வான்துதிக்கும்
குலத்தே தலைமை கொடுத்தென் உளத்தில் குலவுகின்றாய்
தலத்தே அருட்பெருஞ் சோதிஅப் பாஎன் தயாநிதியே
பாடல் எண் :5484
நிலத்தே அடைந்த இடர்அனைத்தும்
நிமிடத் தொழித்தே நிலைபெற்றேன்
வலத்தே அழியா வரம்பெற்றேன்
மணிமன் றேத்தும் வாழ்வடைந்தேன்
குலத்தே சமயக் குழியிடத்தே
விழுந்திவ் வுலகம் குமையாதே
நலத்தே சுத்த சன்மார்க்கம்
நாட்டா நின்றேன் நாட்டகத்தே
Dear sanmarges . You are welcome to register at FREE of cost.