நிலந்தெளிந் ததுகண மழுங்கின சுவண நீடொளி தோன்றிற்றுக் கோடொலிக் கின்ற அலர்ந்தது தாமரை ஆணவ இருள்போய் அழிந்தது கழிந்தது மாயைமால் இரவு புலர்ந்தது தொண்டரோ டண்டரும் கூடிப் போற்றியோ சிவசிவ போற்றிஎன் கின்றார் இலங்குரு வளித்தஎன் அருட்பெருஞ் சோதி என்குரு வேபள்ளி எழுந்தரு ளாயே