நிலவும் ஒண்மதி முகத்தியர்க் குழன்றாய் நீச நெஞ்சர்தம் நெடுங்கடை தனிற்போய் இலவு காத்தனை என்னைநின் மதியோ எழில்கொள் ஒற்றியூர்க் கென்னுடன் போந்து பலவும் ஆய்ந்துநன் குண்மையை உணர்ந்தத பத்தர் உள்ளகப் பதுமங்கள் தோறும் உலவும் ஓம்சிவ சண்முக சிவஓம் ஓம்சி வாயஎன் றுன்னுதி மனனே திருச்சிற்றம்பலம் சிவசண்முகநாம சங்கீர்த்தன லகரி திருவொற்றியூர் எண்சீர்க் கழிநெடிலடி ஆசிரிய விருத்தம் திருச்சிற்றம்பலம்