நிலைஅருள் நினது மலர்அடிக் கன்பு நிகழ்ந்திட நாள்தொறும் நினையாப் புலையர்தம் இடம்இப் புன்மையேன் புகுதல் பொறுக்கிலன் பொறுக்கிலன் கண்டாய் மலைஅர சளித்த மரகதக் கொம்பர் வருந்திஈன் றெடுத்தமா மணியே தலைஅர சளிக்க இந்திரன் புகழும் தணிகைவாழ் சரவண பவனே