நிலைகாட்டி ஆண்டநின் தாட்கன்பி லாதன்பில் நீண்டவன்போல் புலைகாட் டியமனத் தேன்கொண்ட வேடம் புனைஇடைமேல் கலைகாட்டிக் கட்டு மயிர்த்தலை காட்டிப்புன் கந்தைசுற்றி முலைகாட்டி ஆண்மகன் பெண்வேடம் காட்டு முறைமையன்றே