நிலைகொள் நீறிடாப் புலையரை மறந்தும் நினைப்ப தென்பதை நெஞ்சமே ஒழிக கலைகொள் நீறிடும் கருத்தரை நாளும் கருதி நின்றுளே கனிந்துநெக் குருக மலைகொள் வில்லினான் மால்விடை உடையான் மலர்அ யன்தலை மன்னிய கரத்தான் அலைகொள் நஞ்சமு தாக்கிய மிடற்றான் அவனை நாம்மகிழ்ந் தடைகுதற் பொருட்டே