நிலைநாடி அறியாதே நின்னருளோ டூடி நீர்மையல புகன்றேன்நன் னெறிஒழுகாக் கடையேன் புலைநாயேன் புகன்றபிழை பொறுத்தருளல் வேண்டும் பூதகணஞ் சூழநடம் புரிகின்ற புனிதா கலைநாடு மதியணிந்த கனபவளச் சடையாய் கருத்தறியாக் காலையிலே கருணைஅளித் தவனே தலைஞான முனிவர்கள்தந் தலைமீது விளங்கும் தாளுடையாய் ஆளுடைய சற்குருஎன் அரசே