நிலையறி யாத குடும்பத் துயரென்னும் நீத்தத்திலே தலையறி யாது விழுந்தேனை ஆண்டருள் தானளிப்பாய் அலையறி யாத கடலேமுக் கண்கொண்ட ஆரமுதே விலையறி யாத மணியே விடேலிதென் விண்ணப்பமே