நிலையி லாஉல கியல்படும் மனத்தை நிறுத்தி லேன்ஒரு நியமமும் அறியேன் விலையி லாமணி யேஉனை வாழ்த்தி வீட்டு நன்னெறிக் கூட்டென விளம்பேன் அலையில் ஆர்ந்தெழும் துரும்பென அலைந்தேன் அற்ப னேன்திரு அருளடை வேனே சிலையில் ஆர்அழல் கணைதொடுத் தவனே திகழும் ஒற்றியூர்த் தியாகமா மணியே