நிலையைத் தவறார் தொழுமொற்றி நிமலப் பெருமானீர்முன்ன மலையைச் சிலையாக் கொண்டீர்நும் மாவல் லபமற் புதமென்றேன் வலையத் தறியாச் சிறுவர்களு மலையைச் சிலையாக் கொள்வர்களீ திலையற் புதந்தா னென்கின்றா ரிதுதான் சேடி யென்னேடீ