நீக்கிய மனம்பின் அடுத்தெனைக் கலக்கி நின்றதே அன்றிநின் அளவில் நோக்கிய நோக்கம் பிறவிட யத்தே நோக்கிய திறையும் இங்குண்டோ தூக்கிய பாதம் அறியநான் அறியேன் துயரினிப் பொறுக்கலேன் சிறிதும் தேக்கிய களிப்பில் சிறப்பவந் தென்னைத் தெளிவித்தல் நின்கடன் சிவனே