நீடி வளங்கொள் ஒற்றியில்வாழ் நிமலர் உலகத் துயிர்தோறும் ஓடி ஒளிப்பார் அவர்நீயும் ஒக்க ஓட உன்வசமோ நாடி நடிப்பார் நீயும்உடன் நடித்தால் உலகர் நகையாரோ ஈடில் மயல்கொண் டெதுபெறுவாய் ஏழை அடிநீ என்மகளே