நீடு வாழ்க்கை நெறிவரு துன்பினால் வாடும் என்னைவ ருந்தல்என் றுன்பதம் பாடும் வண்ணம்நற் பாங்கருள் வாய்மன்றுள் ஆடும் முக்கண்அ ருட்பெரு வெள்ளமே
நீடு சிவாகமங் கோடி - அருள் நேருறப் பாடியும் ஆடியும் ஓடித் தேட இருந்தது பாரீர் - திருச் சிற்றம் பலத்தே திருநட ஸோதி ஸோதி