நீடும் ஐம்பொறி நெறிநடந் துலக நெறியில் கூடிநீ நினைப்பொடு மறப்பும் நாடும் மாயையில் கிடந்துழைக் கின்றாய் நன்று நின்செயல் நின்றிடு மனனே ஆடும் அம்பலக் கூத்தன்எம் பெருமான் அமர்ந்த ஒற்றியூர் ஆலயத் தின்றே ஈடு நீங்கிடச் செல்கின்றேன் உனக்கும் இயம்பி னேன்பழி இல்லைஎன் மீதே