நீட்டம் உற்றதோர் வஞ்சக மடவார் நெடுங்கண் வேல்பட நிலையது கலங்கி வாட்டம் உற்றனை ஆயினும் அஞ்சேல் வாழி நெஞ்சமே மலர்க்கணை தொடுப்பான் கோட்டம் உற்றதோர் நிலையொடு நின்ற கொடிய காமனைக் கொளுவிய நுதல்நீ நாட்டம் உற்றதோர் நாதன்தன் நாமம் நமச்சி வாயம்காண் நாம்பெறும் துணையே