நீரார் சடையது நீண்மால் விடையது நேர்கொள்கொன்றைத் தாரார் முடியது சீரார் அடியது தாழ்வகற்றும் பேரா யிரத்தது பேரா வரத்தது பேருலகம் ஒரா வளத்ததொன் றுண்டேமுக் கண்ணொடென் உள்ளகத்தே