நீர்க்கும் மதிக்கும் நிலையாக நீண்ட சடையார் நின்றுநறா ஆர்க்கும் பொழில்சூழ் திருஒற்றி வாணர் பவனி வரக்கண்டேன் பார்க்கும் அரிக்கும் பங்கயற்கும் பன்மா தவர்க்கும் பண்ணவர்க்கும் யார்க்கும் அடங்கா அவரழகை என்னென் றுரைப்ப தேந்திழையே