நீர்சொ ரிந்தொளி விளக்கெரிப் பவன்போல் நித்தம் நின்னிடை நேசம்வைத் திடுவான் பார்சொ ரிந்திடும் பவநெறி முயன்றேன் பாவி யேன்தனைக் கூவிநின் றாள்வாய் கார்சொ ரிந்தெனக் கருணைஈந் தன்பர் களித்த நெஞ்சிடை ஒளித்திருப் பவனே தேர்சொ ரிந்தமா மணித்திரு வீதித் திகழும் ஒற்றியூர்த் தியாகநா யகனே டீயஉம -------------------------------------------------------------------------------- நெஞ்சு நிலைக் கிரங்கல் திருவொற்றியூர் கட்டளைக் கலித்துறை