நீர்பிறரோ யான்உமக்கு நேயஉற வலனோ நெடுமொழியே உரைப்பன்அன்றிக் கொடுமொழிசொல் வேனோ சார்புறவே அருளமுதம் தந்தெனைமேல் ஏற்றித் தனித்தபெரும் சுகம்அளித்த தனித்தபெரும் பதிதான் சீர்பெறவே திருப்பொதுவில் திருமேனி தரித்துச் சித்தாடல் புரிகின்ற திருநாள்கள் அடுத்த ஓர்புறவே இதுநல்ல தருணம்இங்கே வம்மின் உலகியலீர் உன்னியவா றுற்றிடுவீர் விரைந்தே