நீற்றணி விளங்கும் அவர்க்கருள் புரியும் நின்அடிக் கமலங்கள் நினைந்தே போற்றிடா தவர்பால் பெய்யனேன் புகுதல் பொறுக்கிலன் பொறுக்கிலன் கண்டாய் ஆற்றல்கொள் நின்பொன் அடியருக் கடியன் ஆச்செயில் உய்குவன் அமுதே சாற்றிடும் பெருமைக் களவிலா தோங்கும் தணிகைவாழ் சரவண பவனே