நீற்றிலிட்ட நிலையாப்புன் னெறியுடையார் தமைக்கூடிச் சேற்றிலிட்ட கம்பமெனத் தியங்குற்றேன் தனைஆளாய் ஏற்றிலிட்ட திருவடியை எண்ணிஅரும் பொன்னையெலாம் ஆற்றில்இட்டுக் குளத்தெடுத்த அருட்டலைமைப் பெருந்தகையே