நீல னேன்கொடும் பொய்யல துரையா நீசன் என்பதென் நெஞ்சறிந் ததுகாண் சால ஆயினும் நின்கழல் அடிக்கே சரண்பு குந்திடில் தள்ளுதல் வழக்கோ ஆலம் உண்டநின் தன்மைமா றுவதேல் அகில கோடியும் அழிந்திடும் அன்றே சீல மேவிய ஒற்றியம் பரனே தில்லை அம்பலம் திகழ்ஒளி விளக்கே