நீலக் களங்கொண்ட நீடொளியே நீள்கங்கை கோலச் சடைக்கணிந்த கோமளமே - ஞாலத்தில் அந்தோ சிறியேன் அருளின்றி வாடுவது சந்தோட மோநின் றனக்கு