நீலம் இட்டகண் மடவியர் மயக்கால் நெஞ்சம் ஓர்வழி நான்ஒரு வழியாய் ஞாலம் இட்ட இவ் வாழ்க்கையில் அடியேன் நடுங்கி உள்ளகம் நலியும்என் தன்மை ஆலம் இட்டருள் களத்தநீ அறிந்தும் அருள்அ ளித்திலை ஆகமற் றிதனை ஓலம் இட்டழு தரற்றிஎங் குரைப்பேன் உனைஅ லால்எனை உடையவர் எவரே