நீளாதி மூலமென நின்றவனும் நெடுநாள் நேடியுங்கண் டறியாத நின்னடிகள் வருந்த ஆளாநான் இருக்குமிடம் அதுதேடி நடந்தே அணிக்கதவந் திறப்பித்துள் ளன்பொடெனை அழைத்து வாளாநீ மயங்காதே மகனேஇங் கிதனை வாங்கிக்கொள் என்றெனது மலர்க்கைதனிற் கொடுத்தாய் கேளாய்என் உயிர்த்துணையாய்க் கிளர்மன்றில் வேத கீதநடம் புரிகின்ற நாதமுடிப் பொருளே