நெஞ்ச மேஇஃ தென்னை நின்மதி வஞ்ச வாழ்வினில் மயங்கு கின்றனை தஞ்சம் என்றருள் தணிகை சார்த்தியேல் கஞ்ச மாமலர்க் கழல்கி டைக்குமே
நெஞ்ச மேஇது வஞ்ச மேஅல பிஞ்ச கன்பதம் தஞ்சம் என்பதே