நெஞ்சே உகந்த துணைஎனக்கு நீஎன் றறிந்தே நேசித்தோன் மஞ்சேர் தணிகை மலைஅமுதை வாரிக் கொளும்போ தென்னுள்ளே நஞ்சே கலந்தாய் உன்உறவு நன்றே இனிஉன் நட்பகன்றால் உய்ஞ்சேன் இலையேல் வன்னரகத் துள்ளேன் கொள்ளேன் ஒன்றையுமே
நெஞ்சே உலக நெறிநின்று நீமயலால் அஞ்சேல்என் பின்வந் தருள்கண்டாய் - எஞ்சாத் தவக்கொழுந்தாம் சற்குணவர் தாழ்ந்தேத்தும் ஒற்றிச் சிவக்கொழுந்தை வாழ்த்துதும்நாம் சென்று