நெடுமாலும் பன்றிஎன நெடுங்காலம் விரைந்து நேடியுங்கண் டறியாது நீடியபூம் பதங்கள் தொடுமாலை யெனவருபூ மகள்முடியிற் சூட்டித் தொல்வினையேன் இருக்குமிடந் தனைத்தேடித் தொடர்ந்து கடுமாலை நடுஇரவிற் கதவுதிறப் பித்துக் கடையேனை அழைத்தெனது கையில்ஒன்று கொடுத்துக் கொடுமாலை விடுத்துமகிழ் எனத்திருவாய் மலர்ந்தாய் குணக்குன்றே இந்நாள்நின் கொடையைஅறிந் தனனே